திருமாவளவனுக்கு போன் செய்த இபிஎஸ்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? வெளியான பரபரப்பு தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 4:32 pm

திருமாவளவனுக்கு போன் செய்த இபிஎஸ்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? வெளியான பரபரப்பு தகவல்!!!

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் சென்னை நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியக் கூட்டணியின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் முழுமையாக உழைப்போம்.

திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால் மட்டும் போதும் என்று இருக்கக் கூடாது 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும் அதற்குத் தான் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் . மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது அதுவே நமது சபதம் என தெரிவித்தார்.

இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் அதுவே பாஜகவின் நோக்கம், ஆனால் அதற்கு தடைக்கல்லாக இருப்பது அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம் தான். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என அனைத்து கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாக இருக்கிறது, மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான். பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு தாழ்வு பார்ப்பது தான் சனாதானம் இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்த பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிக-வின் கொள்கை. சனாதனத்தை பின்பற்றுவது தான் மனுஸ்ருதி அதற்கு எதிரானது தான் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம்.

நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதனை பயன்படுத்தி சிலர் திமுகவை பலவீனமாக்குவதற்காக திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக வதந்திகளை பரப்பியதாக குற்றம்சாட்டினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!