ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்.. வேட்பாளரை வாபஸ் பெறும் ஓபிஎஸ் தரப்பு..? உடனே சென்னைக்கு பறந்த ஓபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 11:53 am

ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Supreme court - Updatenews360

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தனர். மேலும், பொதுக்குழு முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம், இந்த இடைக்கால உத்தரவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறியது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சார்பில் தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகனையும் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். தற்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், உச்சநீதிமன்ற உத்தரவால் இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகவும், பொதுக்குழுவின் வாயிலாக வேட்பாளரை தேர்வு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!