அண்ணாமலையும், பாஜகவும் வெத்து வேட்டு… இந்தத் தேர்தலில் அதனை நிரூபிப்போம் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சூளுரை!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 3:49 pm

ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும், என் இளைய மகனுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி..கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;- ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்னதற்கு நன்றி.காங்கிரஸ் வேட்பாளரை ஓரிரு நாளில் காங்கிரஸ் தேசிய தலைமை அறிவிக்கும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும், இளைய சமுதாயத்தை சார்ந்தவர்கள் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

என்னுடைய குடும்பத்தில் இருந்து ஒருவர் நிற்கவைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் சொன்னதால், இளைய மகனுக்காக கோரிக்கை வைத்துள்ளேன். கட்சியில் மற்ற சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனவே, காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுப்பார்கள் தலைமை எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்.

அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். அதிமுகவிடம் ஒற்றுமை இல்லை. குழப்பத்தில் இருக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 4 பேரும் சேர்ந்து வந்தாலும் தனித்தனியாக வந்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

காங்கிரசுக்கு சவால் இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக கூட்டணியும் இருப்பதால் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. பாஜக ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனை போன்றது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக. சொல்வது பொய். மூன்றாவது இடம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தான்.

அகில இந்திய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மாவட்ட கட்சியாக மாறிவிட்டது. அண்ணாமலையும், பாஜகவும் வெத்து வெட்டு என்பது இந்த தேர்தலில் தெரியும், என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!