பாஜகவினரை தொடக்கூட முடியாது… வாடகைக்கு ஆட்களை கூட்டி வந்து கட்சி நடத்துறாங்க.. பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
4 April 2023, 4:37 pm

பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. திராவிட கழகம் முன்பு அந்த முயற்சியை கையில் எடுத்தார்கள். தற்போது, காங்கிரஸ் என கூறிக்கொள்ளும் குண்டர்கள் அந்த முயற்சியில் இறங்கி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

நேற்று மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளா..? என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தாருங்கள். காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.

குமரி மாவட்ட காவல்துறை தன்னுடைய மரியாதையை இழந்து வருகிறது. மாவட்ட மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுங்கள். மாவட்ட மக்களுக்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆகவே, இதை வலியுறுத்தி வரக்கூடிய ஆறாம் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போரட்டம் பாஜக சார்பில் நடைபெருகிறது.

இந்த போராட்டம் பாஜக போராட்டம் என்று நினைக்காமல், தன் கடமையில் இருந்து தவறிய காவல் துறையினருக்கும், சேர்த்து நடத்தும் போராட்டமாக இது இருக்கும், எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!