கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தால் சென்னைக்கு ஆபத்து… நினைவுச்சின்னம் வைக்க வேறு இடமில்லையா..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி…!!

Author: Babu Lakshmanan
16 September 2022, 12:58 pm

திமுக அரசு மக்கள் நல பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும், விளம்பர கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்

மின்கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட , பின்னர் “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை பாடியும் தொண்டர்களை பாடவைத்தும் உற்சாகமூட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் :-மக்கள் நல பிரசனைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் கோயபலஸ் அரசகாவே இந்த அரசு செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் கழக அமைப்பு சார்ந்த மாவட்டங்களில் எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இவற்றை காதுகொடுத்து கேட்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.

கலைஞர் நினைவிடத்தில் பேனா அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி கொடுத்து இருந்தாலும் , மீனவர்களின் வாழ்வாதாரம் மிக பெரிய அளவில் பாதிக்கப்படும். சென்னையின் அடையாளமே பறிபோகும் நிலை ஏற்படும். எதிர்க்கட்சி எனும் பெயரில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். கருணாநிதி புகழ்பாடும் அரசகாவே இந்த அரசு உள்ளது. அறிவாலயத்தில் பேனா சிலை வைக்க வேண்டியது தானே ?.

எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது என்ற பண்ருட்டி ராமசந்திரனின் கருத்து அவர் தனிப்பட்ட கருத்து. ஓ.பி.எஸ் கட்சி அல்ல, அதிமுக கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த முடியுமா..? அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர், எனக் கூறினார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!