தொண்டனை அடிக்கும் எந்த கட்சியும் உருப்படாது… ஸ்டாலின் கண்டித்திருந்தால் மீண்டும் இப்படி நடந்திருக்காது : ஜெயக்குமார் விமர்சனம்

Author: Babu Lakshmanan
27 January 2023, 6:35 pm
Quick Share

தொண்டனை அடிக்கும் எந்த கட்சியும் உருப்படாது என்று சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு செய்த செயலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணாவின் நினைவு நினைவு நாளை தொடர்ந்து, அவருடைய நினைவு நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது தொடர்பாக ஆணையரிடம் அனுமதி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் வகையில், அனுமதி கேட்டு கடிதம் ஆணையர் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா தமிழகத்தை ஏற்றம் பெற செய்ய வேண்டும் என எத்தனையோ திட்டங்கள் தமிழகத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர் அறிஞர் அண்ணா. ஈரோடு இடைத்தேர்தலுக்கு 31ஆம் தேதி தான் மனு தாக்கல் ஆரம்பம். ஆகையினால் தேவைக்கேட்ப கால அவகாசம் உள்ளது.

களம் என்பது எங்கள் கையில் உள்ளது. தேர்தலில் வெற்றி பெறப்போவது அதிமுக தான். ஆகையினால், யார் முதலில் வேட்பாளர் அறிவித்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்தது, கூட்டம் யார் முதலில் அறிவித்துள்ளார் என்பது அவசியமில்லை. விரைவில் அதிமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

ஜனநாயகத்தில் மலர்ந்த இயக்கம் எனும் அடிப்படையில் விருப்ப மனு வாங்கி ஆட்சி மன்ற குழு தேர்ந்தெடுத்து வாக்காளர்கள் அறிவிக்கப்படுவர். ஆனால், திமுக போன்ற ஒரு சர்வாதிகாரமும் ஜமீன்தார் போன்ற கட்சி அதிமுக கிடையாது. ஆகையினால், கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும்.

நட்பு உணர்வு, தோழமை உறவு, கூட்டணி தர்மம் ஆகிய மூன்றை கடைப்பிடித்து விட்டோம். ஆகையினால், முன்பே கூட்டணியில் உள்ளவர்களும், நாங்கள் சென்று ஆதரவு கேட்டவர்களும் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெளிவாக உள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆகையினால் தான் பணம் பலம், வசூலில் கொடிக்கட்டி பார்ப்பவர்களை களம் இறக்கி உள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடக்கின்ற ஒரு போட்டி. பணநாயகம் வென்றதாய் சரித்திரம் இல்லை. ஆகையினால் மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கும் மாநிலம் தமிழகமாக இருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு தேவையானது நிம்மதி மட்டும் தான்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தல் ஆட்சிக்கு ஒரு விஷ பரிட்சை. ஆகையினால் முழுவதும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்வதற்கு 70 நபர்களை நியமித்துள்ளனர்.

மக்கள் சக்தி முன்னால் 70 அல்ல 7000 நபர்கள் இருந்தாலும், அவர்களுடைய பண பட்டுவாடா எடுபடாது. ஓபிஎஸ் உடன் இருப்பவர்களை கட்சி என்று கூட சொல்ல முடியாது. அது நான்கைந்து நபர்கள் கொண்ட குழு. ஆகையினால் கட்சிக்குள் பிளவும் இல்லை. பிரிவும் இல்லை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி ஒற்றை தலைமையில் அதிமுக உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. திருச்சியில் கேன் நேரு அவருடைய கட்சிக்காரரை அடித்துள்ளார். அதை கட்சித் தலைவரான ஸ்டாலின் கண்டித்து இருந்தால், இது இரண்டாம் முறை நடந்திருக்க வாய்ப்பில்லை. தொண்டரை அடித்த அமைச்சரை மேலே உட்கார வைத்தவர் தொண்டன் தான். தொண்டர்களை அடிக்கும் நபர்கள் கொண்ட கட்சி உருப்படாது.

பெரியார் வழியில் இருக்கிறோம் என கூறிக்கொண்டு அமைச்சர்களின் நடவடிக்கை மக்கள் எள்ளி நகையாடும் விதத்தில் உள்ளது. திராவிட மக்கள் கொடியேற்ற முடியாமல் தடுக்கும் நிகழ்வு நடந்திருக்கும் போது, ஆதிதிராவிட மக்களுக்கு திமுக கொடுக்கும் மரியாதையும், முக்கியத்துவமும் காஞ்சிபுரம் நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.

பிபிசி பிரதமர் மோடி தொடர்பாக உருவாக்கப்பட்ட ஆவணப்படத்தை தான் காணவில்லை. அதை பார்த்துவிட்டு அதன் தொடர்பாக கருத்து தெரிவிக்கிறேன், எனக் குறிப்பிட்டார்.

Views: - 325

0

0