மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா…? இல்ல கண்துடைப்பு நாடகத்தை தொடருமா..? திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 11:36 am

மக்கள் தொகை அதிகம் உள்ள  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது கண்டுதுடைப்பாகும் என்று எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-  இன்னைக்கு தமிழகமெங்கும் குடிநீர் பற்றாக்குறை தான் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நீர் மேலாண்மையிலே கோட்டை விட்டு இன்றைக்கு மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை நாம் உணர முடிகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்க தகுந்த முன்னேற்பாடுகளை இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லையோ என்கிற மிகப்பெரிய கவலை ஏற்பட்டது. 

மேலும் படிக்க: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை… CM ஸ்டாலின் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய இபிஎஸ்

32 வருவாய் மாவட்டங்களாக இருந்ததை 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக எடப்பாடியார் உயர்த்தினார். இன்றைக்கு 22 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. கிடைத்த மழை நீரை சேமிக்க வைக்காதது தான் காரணமாகும், அதனால் வறட்சியால் மக்கள் துன்பங்கள் துயரங்கள் அடைந்து வருகிறார்கள்.

இன்றைக்கு அரியலூர், கோவை, கடலூர் ,தர்மபுரி, திண்டுக்கல் ,கள்ளக்குறிச்சி ,கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம்,தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் வரை உள்ள 22 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அரசு  செய்தி குறிப்பில் தெரிவிக்கிறது.

ஊரக உள்ளாட்சி துறைக்கு 150 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை ஆகிய துறைக்கு தலா 75 கோடி என மொத்தம் 300 கோடி என்று இன்றைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நகராட்சிகள், பேரூராட்சிகள் என மக்கள் தொகை  அதிகம் உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமாக  மாற்று ஏற்பாட்டில் குடிநீர் வழங்குவதற்கு இந்த 75 கோடி என்பது போதிய அளவாக நிச்சயமாக இருக்காது.  தண்ணீர் பற்றாக்குறையால், கண்ணீர் வடிக்கின்ற மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக கண்துடைப்பு நடவடிக்கையாக இந்த அரசு இதை எடுத்து இருக்கிறதோ என்கிற ஒரு ஐயம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

லாரியில் மூலம் தண்ணீர் வழங்குவது, தேவையான இடங்களில் ஆழ்குழாய் அமைப்பது.  நீரூற்றுகளை நாம் பலப்படுத்துவது, அதிலிருந்து நீரை எடுத்து சுத்திகரித்து  அதை மக்களுக்கு வழங்குவது இந்த பல்வேறு இந்த சவால்களுக்கு இந்த 300 கோடி என்பது அதுவும் குறிப்பாக  மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் 75 கோடி என்பதும் கண்துடைப்பாகத் தான் இந்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக உள்ளது.

நீர் மேலாண்மை திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டம், குடி மராமத்து திட்டம் போன்றவற்றை அரசு முழுமையாக கைவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு போன்ற தொடர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. அன்றைக்கு வெட்கம் இருக்கா? மானம் இருக்கா என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டார். இன்றைக்கு நீட் தேர்வு ரகசியத்தை ஏன் ரத்து செய்யவில்லை. உங்களுக்கு மானம் இருக்கிறதா? வெட்கம் இருக்கிறதா? அந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.

தமிழகத்தில் பயனுள்ள திட்டமான குடிமராமத்து திட்டத்தை இன்று நீங்கள் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. ஆகவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்த அரசு இனிமேலும் தூங்கிக் கொண்டு இல்லாமல் விழித்துக் கொண்டு மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா? அல்லது கண்துடைப்பு நாடகத்தை தொடருமா என கேள்வியெழுப்பினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!