நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு..!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 3:31 pm

நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை முனிச்சாலையில் ஆக. 20ல் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அதிமுக மாநாடு தொடர்பான ஸ்ட்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில் “கரி கட்டையால் அதிமுக வரலாற்றை சுவரில் எழுதி கட்சியை வளர்த்தோம். மதுரையில் அதிமுக மாநாட்டை தொண்டர்கள் நடத்துகிறார்கள், அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மற்ற கட்சிகள் மாநாட்டுக்கு கூட்டத்தை கூட்டுகிறார்கள். அதிமுக மாநாட்டில் தானாக சேரும் கூட்டம். நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது. அளவு கோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும், தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல முதல்வர் பேசுகிறார்.

உப்பு தின்பவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அமலாக்கத்துறை விசாரணையில் பாகுபாடு காட்டவில்லை. தவறு செய்தவர்களிடம் மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது,” என கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?