இனி கை ரேகை வேண்டாம்…ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அறிவிப்பு…!

Author: kavin kumar
29 January 2022, 8:42 pm
Quick Share

சென்னை: ரேஷன் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களை தடையின்றிபொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டது. இவற்றை ஜன.31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரும் ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகைப் பதிவு, இயந்திரங்களில் சரியாக பதிவாகவில்லை என்றும்,

இதன் காரணமாக, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில் சிரமம் இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. எனினும் பழைய முறைப்படி பொருட்களை வினியோகம் செய்யவும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால், விற்பனை முனைய இயந்திரத்தில் QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்தும், பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்பஅட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 1340

0

0