அடுத்தடுத்து பட்டாசுக் கடைகளில் தீ விபத்து : 5 கடைகளில் தீ பரவியதால் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறி சேதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 10:47 am

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வடமால பேட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா கிளப் மைதானத்தில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் சற்று நேரத்திற்கு முன் மீண்டும் விடுத்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் பட்டாசு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகள் வெடித்து சிதறுவது பற்றிய தகவல் தெரிந்த விஜயவாடா தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!