‘பெரிய தப்பு பண்ணீட்டீங்க அண்ணாமலை’… திடீரென ‘தமிழ்நாடு’க்கு காயத்ரி ரகுராம் ஆதரவு : கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 1:58 pm

தமிழ்நாடு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைப்பதே சரியானதாக இருக்கும் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை அடங்குவதற்கும், சட்டப்பேரவையில், திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட பெயர்களை தவிர்த்து விட்டு உரை நிகழ்த்தினார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இதனை துளியும் பொருட்படுத்தாத ஆளுநர், பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழில் தமிழகம் எனக் குறிப்பிட்டதுடன், தமிழக அரசின் இலட்சிணையையும் தவிர்த்தார். இது இன்னும் பேசுபொருளாக மாறியது.

இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்ட கடிதத்தில், ” பாஜக மாநில தலைவர் எனக் குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை. இந்தக் கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காயத்ரி ரகுராமன், தமிழ்நாடு என ஏன் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பெருமைமிக்க கன்னடிக அண்ணாமலை.. அவரது பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்ற வார்த்தை குறிப்பிட தமிழ்க பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதில் நேற்றைய தந்தி பேட்டியில் கவர்னரின் பொங்கல் அழைப்பிதழை காட்டி கொடுக்கிறார்.

டெல்லியில் இருந்து திரு தீனதயாள் உபாத்தியா அவர்களின் தபால் தலை ஒட்ட வேண்டும் என்று தெரிந்த அண்ணாமலை, அவரது பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றே விட்டுள்ளனர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகியதில் இருந்து அடுத்தடுத்து அண்ணாமலையை சீண்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால், அண்ணாமலை ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!