பாஜகவின் PROPERTYஆ ராமர்? என்ன கொடுமை இது.. இறைவனையே இலவசமாக்கிட்டாங்க : கொந்தளித்த சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 4:13 pm

பாஜகவின் PROPERTYஆ ராமர்? என்ன கொடுமை இது.. இறைவனையே இலவசமாக்கிட்டாங்க : கொந்தளித்த சீமான்!!

சென்னையில் இன்று மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை சீமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமித்ஷாவின் வாக்குறுதி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சீமான் அளித்த பதிலாவது, கடைசியாக அமித்ஷாவும் இலவசம் என பேசியிருக்கிறார். அவங்க என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க..? பிஜேபியின் பிராப்பர்ட்டியா ராமர்?

எனக்கு கடவுள் உங்களுக்கு கடவுள் இல்லையா? இறைவனையே இலவசமாக்கிட்டானுங்க இவனுக ஆட்சியில்.. என்ன கொடுமை பாருங்க.. இவ்வளவு ஒரு இழிவான அரசியல் நிலையை எங்கயாவது பார்த்திருக்கீங்களா? அய்யோ.. அய்யோ…

அதேபோல் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்வியையும் சீமானிடம் செய்தியாளர்கள் எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதிலளித்த சீமான், அவருக்கு தெரியும்… நடக்கப் போறது இல்லைன்னு தெரியும். நான் கூட அறிவிப்பேன் பார்த்தீர்களா? ரூ1,000 கோடி தருவேன்னு திடீரெனு அறிவிப்பேன். நடக்காது என அவருக்கு தெரியும்.. பெரியார் சிலையை வந்தால் எடுப்போம் என்பதும் அப்படித்தான் என அவர் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!