இன்னைக்கு தான் தீபாவளியே… ரூ.1,300 வரை குறைந்த தங்கம்

Author: Hariharasudhan
7 November 2024, 10:28 am

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியாய் இன்று தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: தீபாவளி திருநாள் விடுமுறையையொட்டி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்து வந்த தங்கம், கடந்த 2 நாட்களாக குறைந்தும், சற்று அதிகமாகியும் காணப்பட்டது. மேலும், ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்கள் இருந்தாலும், தங்கம் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியால் தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

TRUMP SMILE

இதன்படி, இன்று (நவ.7) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 165 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் சாதிக்க முடியாது… கட்சியால் ஒரு பிரயோஜனமும் இல்லை : ரஜினி சகோதரர் விமர்சனம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியும் விலை குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி 3 ரூபாய் குறைந்து 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!