தங்கம் வாங்க நினைப்பவர்ளுக்கு சந்தோஷமான செய்தி… மளமளவென சரிந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 April 2022, 9:51 am

சென்னையில் இன்று தங்கம் விலை மளமளவென குறைந்திருப்பது ஆபரண பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், அண்டை நாடுகளிடையே எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு பிறகு மீண்டும் உச்சம்பெற்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மளமளவென குறைந்திருப்பது ஆபரண பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.68 குறைந்து 4,957 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.544 சரிந்து ரூ.39,656க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலம் மீண்டும் ரூ.40 ஆயிரத்தற்கு கீழ் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 காசுகள் குறைந்து 73.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 சரிந்து 73,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்து வந்த தங்கம் விலை இன்று சட்டென்று குறைந்திருப்பதால், தங்கம் வாங்க ஏற்ற நேரமாக இது பார்க்கப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!