ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை…. இன்று ஒரே நாளில் ரூ.320 அதிகரிப்பு… வாடிக்கையாளர்கள் ஷாக்..!!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 10:50 am

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், அண்டை நாடுகளிடையே எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 உயர்ந்து 4,987 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.320 அதிகரித்து 39,896 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,800ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கும் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!