நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள் : 7.5% இடஒதுக்கீடு மூலம் டாப் 10 இடங்களை பிடித்து அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 7:39 pm

மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

நடப்பாண்டில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மே 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 1.32 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு எழுதிய 2674 அரசு பள்ளி மாணவர்களின் தர வரிசை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது.

இதில் 7.5% இடஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவப்படிப்பு படிக்க தேர்வான மாணவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10 இடங்களில் 8 பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது கூடுதல் பெருமை.

இது குறித்து தி இந்து பத்திரிகையின் துணை ஆசிரியர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 720 மதிப்பெண்களுக்கு 518, 439 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டு மூலம் மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!