வாழ்த்துக்கள் நண்பா… அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு பிரபல நடிகர் போட்ட பதிவு வைரல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 7:50 pm

வாழ்த்துக்கள் நண்பா… அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு பிரபல நடிகர் போட்ட பதிவு வைரல்!!!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு பல வருடங்களாக இருந்தது. தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிளை செய்து வந்த விஜய், கடந்த 2 வருடமாக அரசியல் கட்சி துவங்குவதில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். “விஜய் மக்கள் இயக்கம்” என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து “தமிழக வெற்றி கழகம்” என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதை விஜய் ரசிகர்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகன்றனர். சினிமாவில் உள்ள பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விக்ரம் தனது வாழ்த்துக்களை x தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாழ்த்துக்கள் நண்பா, என விஜய் கையெழுத்திட்டதை பதிவிட்டுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?