தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் காக்கி… பல மாவட்டங்களில் போலீஸ் குவிப்பு.. காரணம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 9:16 am

தமிழகத்தல் திரும்பும் திசையெல்லாம் காக்கி… பல மாவட்டங்களில் போலீஸ் குவிப்பு.. காரணம் என்ன?

காணும் பொங்கலை முன்னிட்டு முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து உள்ளது. மக்கள் அதிகளவில் வருவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர் பீச்சுகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். கோவையில் 2800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வேளாங்கன்னியில் சுமார் 1000 போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

பொங்கல் முடிந்து மக்கள் பலரும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். இதனால் பலர் இன்று பீச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு பின்பான சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று சிறப்பு பேருந்துகள் இயங்கிய நிலையில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!