பட்டியலின சிறுமி சித்ரவதை விவகாரம் ; திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது… தனிப்படை போலீசார் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
25 January 2024, 6:26 pm

பட்டியலின சிறுமியை சித்ரவதை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா கைது செய்யப்பட்டனர்.

சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில், 18 வயது பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். எம்.எல்.ஏ., மகன் ஆன்ட்ரோ,35 மற்றும் மருமகள் மார்லினா, 31, ஆகியோரால் கடுமையாக தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து. வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏ.,வின் மகன் ஆன்ட்ரோ, அவருடைய மனைவி மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆன்ட்ரோ, மார்லினா இருவரும் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!