நான் இரவல் ஆளுநர் இல்லை… இரக்கமுள்ள ஆளுநர்.. தமிழகத்துக்குள் தமிழிசை வரக்கூடாதா? கொதித்த ஆளுநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 2:02 pm

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி.யில் மகளிர் தினவிழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன், 13 ஆண்டுகள் கழித்து புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது மிகவும் பெருமையான விஷயம். இதற்காக முதல்வர் நிதித்துறையுடன் நான் இணைந்து செயல்பட்டேன். புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம். இதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். புதுச்சேரி ஆளுநர் மீது எந்த விமர்சனமும் வராது, தெலுங்கானா ஆளுநர் மீது வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம்.

புதுவை பல வழிகளில் முன்னேறி வருகிறது. இதற்கு இந்த பட்ஜெட் முன்னுதாராணம். இரவல் ஆளுநர் என்று விமர்சனம் செய்கிறார்கள். இரவல் ஆளுநர்தான் முழு நேர பட்ஜெட்டிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். மக்களை சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறார். தெலுங்கானாவில் இருந்து மருந்துகளை எடுத்துக்கொண்டு புதுவை கொடுத்தது எல்லாம் இந்த இரவல் ஆளுநர் தான். இரவல் ஆளுநர் வேண்டுமா..வேண்டாமா..என்பது அவர்களின் விருப்புரிமை கிடையாது.

என்னை பொறுத்த மட்டில் இரவல் ஆளுநராக நான் இல்லை. இரக்கம் உள்ள ஆளுநராக நான் செயல்பட்டு கொண்டிருக்கிறென். திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் என்னை பாரட்டினார்கள். ஏனெனில், ஒரு மணி நேரம் எந்த பிசிறும் தட்டமால் பாரதியாரையும் பாரதிதாசனையும் மேற்கோள் காட்டி முழுவதுமாக தமிழில் படித்து முடித்த உடனேயே திமுகவை சேர்ந்தவர்களும் பாராட்டினார்கள். கட்சி பாகுபாடு இன்றி நான் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்.

அதனால் புதுவை ஆளுநர் இரவல் ஆளுநர் இல்லை. இரக்கம் உள்ள ஆளுநர். புதுவையை முன்னேற்றியே ஆக வேண்டும் என்று உழைக்கக் கூடிய ஆளுநர். தமிழகத்தை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்துக்கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது.

தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாருமே தடுக்க முடியாது. வேண்டும் என்றாலும் சரி.. வேண்டாம் என்றாலும் சரி.. ட்விட்டரில் என்னை எதிர்த்து பேசினாலும் சரி.. தமிழ்நாட்டிற்குள் தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன். அதைப்பற்றி கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!