விஜயகாந்த் 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி அல்ல 32 அடி பாயக் கூட தயார் : விஜயபிரபாகரன் வாக்கு சேகரிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 5:47 pm

விஜயகாந்த் 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி அல்ல 32 அடி பாயக் கூட தயார் : விஜயபிரபாகரன் வாக்கு சேகரிப்பு!!!

விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலைமான், புளியங்குளம் சாமநத்தம், பனையூர், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போதே விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசுகையில்;- கேப்டன் மறைந்த பிறகு எல்லாரும் அவர் இல்லையே என வருத்தப்படுகிறீர்கள் கேப்டன் மண்ணில் புதைக்கப்படவில்லை எல்லோருடைய மனதிலும் விதைக்கப்பட்டுள்ளார் என உருக்கமாக பேசினார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பெரிதாக பேசப்படுவது புரட்சி கலைஞர் கேப்டன் மறைவு தான்.

18 வயது நிரம்பிய இளைஞர் அணி இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது ஒரு இளைஞனாக கேட்கிறேன் உங்களுக்காக இந்த தொகுதியில் தங்கி உங்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன் அதனால் கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு கொடுங்கள் நான் உரிமையாக கேட்கிறேன் என்று பேசினார்.

முன்னதாக சிலைமான் பேருந்து நிறுத்தத்தில் உள்ள லட்சுமி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவக்கினார்.

தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் எனது தந்தை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார் அது மட்டும் போதாது மக்களாகிய நீங்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும்‌.

துளசி கூட வாசம் மாறினாலும் மாறும் ஆனால் இந்த தவசி புள்ள வார்த்தை வர மாட்டான் அதனால் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

இரண்டு முறை காங்கிரஸ் எம்பி நீங்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தீர்கள் பத்து ஆண்டுகளாக அவர் என்ன செய்தார் என்பதை கேள்விக்குறியாக உள்ளது இந்த படித்த இளைஞனுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் பல புதிய திட்டங்கள் மதுரைக்கு வரும் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் என்றால் அது மதுரை தான் மாற்றத்தை நோக்கி அடுத்த கட்ட பல திட்டங்கள் வர ஆரம்பிக்கும் அதற்காக மக்களாகிய நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?