மன்னிப்பு கேட்கும் வரை ஊடகத்தை தவிர்க்கிறேன்… அண்ணாமலை திடீர் அறிவிப்பு : திருப்பூரில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 6:00 pm
TIru
Quick Share

மன்னிப்பு கேட்கும் வரை ஊடகத்தை தவிர்க்கிறேன்… அண்ணாமலை திடீர் அறிவிப்பு : திருப்பூரில் பரபரப்பு!

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

வடுகபாளையம் புதூர் கிராமத்திற்கு வருகை தந்த அண்ணாமலை அவர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர் தாய்மார்களும்,60 ஆண்டு காலமாக தமிழக அரசியலை பார்ப்பவர்களும்,முதல் தலைமுறை வாக்காளர்களும், இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் அடுத்த 25 ஆண்டுகள் ஒரு வளர்ந்த நாட்டில் வாழ வேண்டும், ஒரு அருமையான இந்தியாவில் இருக்க வேண்டும்

பொருளாதார வாய்ப்பு நன்றாக இருக்க வேண்டும்,வேலை வாய்ப்பு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..

நம்முடைய குழந்தைகள்  பள்ளிக்கூடத்துக்கு சென்று வரக்ககூட பிரச்சனை,மத்திய அரசுடைய திட்டங்களில் பிரச்சனை, இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வேண்டும்.

தைரியமாக உங்கள் முன்னால் உங்கள் வீட்டுப் பிள்ளை அன்பு தம்பி அண்ணாமலை சொல்கிறேன். 100 பேருடைய சிந்தனையும் ஒரு மனிதனால் செய்ய முடியும் என்றால் அது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான் செய்ய முடியும்.

மத்திய அரசால் மட்டுமே ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம்.

இந்த வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்தில் மட்டும் நூறு சதவீதம் மத்திய அரசு பணம் கொடுத்தும், கூட 20 தண்ணீர் குழாய்க்கு இணைப்பு கொடுத்துவிட்டு இங்கு இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைத் தலைவர் அராஜகம் செய்து வருகிறார். பைக் கனெக்சன் கொடுக்க 8000 ரூபாய் கேட்கிறார்.

முதலமைச்சர் திமுக அமைச்சர் திமுக யார் கேள்வி கேட்பான் இந்த முறை நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை கூட இங்கு இருக்கக்கூடிய கும்பல் 70 ஆண்டுகளாக சுரண்டி பிடுங்கும் கும்பல் உங்களை சுரண்டி சுரண்டி பிழைத்துக் கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கு நிலைமை இல்லாத காரணத்தினால் எங்கே எல்லாம் நிலத்தை மாநில அரசினால் நம்முடைய கொடுக்க முடியுமோ வீடு இல்லாதவர்களுக்கு புதிய அப்பார்ட்மெண்ட் கட்டித் தரப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு வேறு கட்சியிலிருந்து பார்லிமென்ட்ல போய் மௌனவிரதம் காத்துட்டு பத்து வருஷம் கழிச்சு வெளியே வந்துள்ளார்கள்..

எந்த பிரச்சனையும் யாரும் தீர்க்கவில்லை. கோவை பாராளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்று வந்தால் கஞ்சா போதை விற்கக்கூடிய ஒரு பையன் இங்கு இருக்க மாட்டார்கள்… காக்கி சட்டை போடாவிட்டாலும்  போதைப்பொருள் நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.

சின்ன கவுண்டம்பாளையம் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சின்ன கவுண்டம்பாளையம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும் என்ற கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசிடம் போராடி பெற்று தருவேன் எனவும், தொடர்ச்சியாக அனுப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசுகையில், வள்ளி கும்மி ஆட்டத்தை தேசிய பாரம்பரிய கலையாக அறிவிப்போம். நான் வெற்றி பெற்று வந்தவுடன் 365 நாட்களாக நடைபெற்று வரும் கிஸ்கால் இரும்பு உருக்கு ஆலையை மத்திய சுற்றுச்சூழல் ஆய்வுக் குழுவை அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டு நிரந்தரமாக ஆலையை மூடுவோம் என தெரிவித்தார்.

தொடர்ச்சியாக காமநாயக்கன்பாளையம் தலைவாசல் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது திமுக ஆட்சி என்பது குரங்கு கையில் கொடுத்த பூமாலை போன்றது எனவும் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் எனவும் வாக்குறுதிகளை தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் நேசபிரபுவை சந்தித்து நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த நெசவாளர் வீட்டில் காலை உணவருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,திருப்பூர் தனியார் நாளிதழ் நிருபர் அர்ஜூனன் என்பவர் அநாகரிகமாக எனது குழுவை சேர்ந்தவரை பேசியுள்ளார்.

அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நான் காவல்நிலையத்தில் புகாரளிப்பேன் . அதுவரை ஊடகத்தை நான் தவிர்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 215

0

0