24 மணி நேரம் டைம் தரேன்.. திமுகவுக்கு திராணி இருந்தா என்னை கைது செய்யுங்க : அண்ணாமலை சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 1:39 pm

வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தனர்.

4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணமலை தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!