அமைச்சர் ‘அல்லேலுயா பாபு’ வாலை சுருட்டிக் கொண்டிருந்தால் அவருக்கு நல்லது : கொந்தளித்த ஹெச்.ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 11:58 am

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு தேவையில்லாத இடையூறுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் அளிப்பதாக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தனது குடும்பத்துடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, சாமி தரிசனத்துக்குப் பின் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய வந்தேன். 14 ஆண்டுகள் நீதி போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் இந்த கோயிலை அரசு எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறியது.

அதனால் அரசியல் சட்ட பிரிவு 26 இன் படி தீட்சிதர்கள் வசம்தான் கோயில் இருக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து பிரிட்டிஷ் கலெக்டர் தெளிவாக எழுதி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை, கோயில்களை கொள்ளை அடிக்கிற துறையாக இருக்கிறது. கோவில் நகைகளை அபகரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தங்கங்களை அபகரிப்பது, தங்கத்தை பிஸ்கட் ஆக்கி பிஸ்கட்டை சாப்பிடுவது என இருக்கிறது.

இந்து விரோத அமைப்பாக இருக்கக்கூடிய அறநிலையத்துறைக்கு அமைச்சராக இருப்பது அல்லேலுயா பாபு, அவரும் இந்து இல்லை. அமைச்சர் அல்லேலுயா பாபுவான சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு ஏதாவது இடையூறுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பள்ளிக்கூடத்தில் நல்லா படிக்கும் பையனை விஷமம் செய்யும் பையன் கிள்ளி விடுவான், பேனாவால் குத்துவான் அந்த மாதிரி இந்த அல்லேலுயா பாபு இடையில் இடையில் தில்லை சபை கோவில் நிர்வாகத்தை கிள்ளுவது, குச்சியால் குத்துவது இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது நிலை அறிந்து வாலைச் சுருட்டி கொண்டு இருப்பது நல்லது.

முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியே, தான் கிறிஸ்தவர் எனக் கூறி இருக்கிறார். நான் சொன்னேனா.. இல்லை.. அண்ணாமலை சொன்னாரா? முதல்வர் குடும்பமே கிறிஸ்தவ குடும்பமாக மாறி இருக்கிறது.

இந்து விரோதிகள் தான் அவர்கள். ரம்ஜானுக்கு, கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை?

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?