ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் அருகதை உங்களுக்கு இல்லை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 9:50 am

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ‘நிட்பீஸ்ட்’ நிகழ்ச்சி நடந்தது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கலந்து கொண்டார்.மாணவ – மாணவியரின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

அவர் பேசியதாவது:அரசியல் என்பது உங்கள் கடமை; அது தொழில் அல்ல.ஓட்டளிக்கும் வயது வந்தும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் உள்ளனர். ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்றவில்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம்.

ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கடமையை நாம் செய்யாவிட்டால் ஜனநாயகம் என நம்பிக் கொண்டிருக்கும் பலம் திருடர்கள் கையில் தான் இருக்கும். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.

இங்கு படிக்கும் அனைவரும் ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும். பின்லேடனும் பொறியாளர் தான்; ஆனால் அவர் அழிக்கும் பொறியாளர். அதுபோல் இல்லாமல் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!