பூமியை தாண்டி மிளிரும் தேசியக்கொடி… பூமியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் பறந்த மூவர்ணக்கொடி ; வைரலாகும் வீடியோ…!

Author: Babu Lakshmanan
15 August 2022, 3:21 pm

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பூமியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு, சமீபத்தில் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி பூமியின் குறைந்த தூர வட்டபாதையில் நிலைநிறுத்தியது.

ஆசாதிசாட் என்ற பெயரிலான இந்த செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதன் அடையாளம் ஆக நாடு முழுவதிலும் இருந்து 750 மாணவிகள் பங்கு கொண்டனர்.

நாட்டின் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்க விடப்பட்டது. இந்திய சுதந்திர தினத்திற்கு, சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோரெட்டி, இந்திய அமெரிக்கரான ராஜா சாரி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?