தமிழகத்தில் மோடி போட்டியிடும் தொகுதி இதுதான்? அண்ணாமலை பரபர தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 2:17 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் தமிழக அரசு செயல்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்கிறது, தமிழக அரசு தடுக்கவில்லை.

மின்கட்டணம் உயர்வு மூன்று முறை உயர்ந்துள்ளது. இந்தியாவில் எங்குமே 27 மாதத்தில் மூன்று முறை உயர்த்தியதாக வரலாறு கிடையாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதற்கான எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை.

அவரது நோக்கம் எல்லாம் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கம். அதனால்தான் மத்திய அரசு திட்டங்கள் இவ்வளவு வந்த போதும் அது பொதுமக்களுக்கு சென்று சேரும் போது ஊழலோடுதான் சென்று சேர்கிறது. அதற்கு காரணம் மாநில அரசுதான்.

தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவிலை. எதிர்க்கட்சிகள் முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளன. உண்மையான இந்தியா, உண்மையான பாரதம் யார் என்பது மக்களுக்கு தெரியும்” என்றார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?