மீண்டும் சாதனை படைத்த இஸ்ரோ: புவியை கண்காணிக்கும் புதிய இ ஓ எஸ்-08 வெற்றிகரமாக பாய்ந்தது D3….!!

Author: Sudha
16 August 2024, 10:07 am

புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, இ.ஓ.எஸ்- 08 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் – ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்’ ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன.விண்கலத்தில் இடம் பெற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ் – 08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து, 475 கி.மீ உயரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!