கட்சி விட்டு கட்சி தாவிய கு.க.செல்வம் : திமுகவில் இணைந்தவருக்கு மீண்டும் முக்கிய பதவி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 7:37 pm
Ku ka selvam - Updatenews360
Quick Share

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். இவர் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்த 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.

பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

அப்போது திமுகவையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.

இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அவர் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் பா.ஜ.கவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Views: - 381

0

0