தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டி… வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் உறுதியானது தொகுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 12:41 pm

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டி… வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் உறுதியானது தொகுதி!!

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு நேர்காணல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி விருப்பமனு அளித்திருந்தார்.

இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த கனிமொழி பங்கேற்றார்.

அவரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. சார்பில் கனிமொழியை தவிர வேறுயாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

  • Kayal Serial Actress Suicide Attempt ‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!