இந்தியாவுக்காக நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழியாக திகழ்கிறார் கனிமொழி : தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 12:01 pm

இந்தியாவுக்காக நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழியாக திகழ்கிறார் கனிமொழி : தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை அமைக்கிறது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர் கூறியதாவது:-நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழியாக திகழ்கிறார் கனிமொழி. தூத்துக்குடியின் பெண் சிங்கமாக திகழ்கிறார் அமைச்சர் கீதா ஜீவன்.

தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின் போது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. தி.மு.க. அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் அரசு. பாதிப்பின் போது பார்வை இடுபவர்கள் நாங்கள் அல்ல; எப்போதும் உங்களுடன் இருப்போம்.

பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தேவையான திட்டங்களை தீட்டுவதுதான் திராவிட மாடல் அரசு. நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

கொரோனவாக இருந்தாலும், புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு ரூ.666 கோடி செலவு செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் சீரழிந்த சாலைகளை ரூ.342 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.

தூத்துக்குடியில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். தென்மாவட்டங்களுக்கு பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவரப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லையில் அமையும் புதிய ஆலைகளால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?