தமிழகத்திற்கு தண்ணீர் தர துளியளவும் கூட கர்நாடகாவுக்கு எண்ணமில்லை ; மத்திய அமைச்சரை சந்தித்த பின் அமைச்சர் பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2023, 10:46 am

தமிழகத்திற்கு தண்ணீர் தர துளியளவும் கூட கர்நாடகாவுக்கு எண்ணமிமில்லை ; மத்திய அமைச்சரை சந்தித்த பின் அமைச்சர் பேட்டி!

தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்திவுள்ளனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது. ஆனால் காவிரி நீர் தர மறுக்கிறது. கர்நாடகாவுக்கு தண்ணீர் தர எண்ணம் இல்லை. காவிரியில் உரியநீரை தமிழகத்திற்கு திறந்துவிட உத்தரவிடக்கோரி வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், உத்தரவுகளை கர்நாடகா முறையாக செயல்படுத்தவில்லை என்று முறையிட்டுள்ளோம். ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!