எம்பி பதவி எனக்கு ஆசை… காங்கிரஸ் தலைவர் பதவி பேராசை ; கேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி சிதம்பரம்…!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 6:26 pm

ராஜிவ் காந்தியை கொன்றவர்களை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கடையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது :- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஆருடம் தான். என்னுடைய கணிப்பு படி 5 மாநில இடைத்தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

ஆளுநர் விவகாரத்தில் தெளிவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தெடுக்கபட்ட அரசின் முடிவுகளை முடக்குவது ஆளுநருக்கு வேலையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டங்களை ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுநருக்கு வேலை அல்ல என்று தெளிவாக கூறியுள்ளது. இந்த அரசுக்கு ஒரு முட்டுக்கட்டை போட வேண்டும், எந்த வில்லங்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடுகிறார்.

இந்தியா கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ராஜீவ் காந்தியை கொன்றவர்களை ஹீரோவாக்கி அவர்களை புகழ்வது என்பது எந்த காலத்திலும் காங்கிரஸ் தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியாது.ராஜிவ்காந்தியை கொன்றவர்களை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது. ராஜிவ் காந்தியை கொன்றது கொடூரமான செயல், அதனை ஒரு போதும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ராகுல் காந்தி எந்த காலத்திலேயும் விடுதலைப் புலிகளை மன்னித்து விட்டேன் என்று இதுவரை கூறவில்லை. எங்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் ஒரு கொலை குற்றவாளி.

AI தொழில்நுட்ப உதவியோடு யார் வேண்டுமானும் எந்த படத்தை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேச வைக்கலாம். யார் எங்கே உயிரோடு இருக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எல்டிடியை ஆதரித்து தான் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. ஆசை பேராசை இரண்டுமே எனக்கு உண்டு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக போட்டியிடவும் ஆசை உள்ளது. தமிழக காங்கிரன் தலைவராக பொறுப்பேற்கவும் பேராசை உள்ளது.

கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் மழை நீர் செல்வதற்கு முறையான வாய்க்கால்கள் இல்லை. இனி வரும் காலங்களில் ஆவது செகண்டரி ஸ்டோரேஜ் முறையை அரசு அறிமுகப்படுத்தி அதற்குண்டான வேலைகளை செய்ய வேண்டும். 10 ஆண்டுகளாக பாஜகவோடு அதிமுக கூட்டணியில் இருந்து விட்டு சில காலங்களாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று கூறி, உங்களால் மட்டும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவிற்கு கிடைத்து விடாது.

சிறுபான்மையினர் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். அவர்களுடைய வாக்கு காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அவர்களுக்குத்தான். அமலாக்கத் துறையை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு, எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!