கச்சத்தீவை தாரைவார்த்தது யார்…? இப்ப உட்கார்ந்து கடிதம் எழுதறாரு CM ஸ்டாலின்… திமுகவை திகைக்க வைத்த பிரதமர் மோடி..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
11 August 2023, 10:19 am
Quick Share

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்..? என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசினார். அப்போது, காங்கிரஸ், திமுகவை பிரதமா மோடி கடுமையாக விமர்சித்ததுடன், அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினார்.

அவர் பேசியதாவது :- கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது வடஇந்தியா என்று கூறுகிறார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி தானே. ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். இதற்கு எதிர்க்கட்சியினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?.

தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறார். தற்போதும் எழுதுகிறார். கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையேவுள்ள தீவு. சிலர் அதை மற்றொரு நாட்டுக்கு (இலங்கைக்கு) கொடுத்தது யார்..? இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அது பாரதத்தாயின் ஒரு பகுதி இல்லையா?. 1962-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை, எனக் கூறினார்.

விருதுநகர் பாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் பாரத மாதாவுக்கு அவமரியாதை செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Views: - 189

0

0