குழந்தைகளை எனக்கு குடுத்துடுங்க: நான் பார்த்துக்கறேன்: நெகிழ்ச்சி பதிவுக்கு கேரள அமைச்சரின் பதில்…!!

Author: Sudha
3 August 2024, 11:03 am

கேரள அரசின் குடும்ப நல மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாடு குறித்த பதிவொன்றை போட்டிருந்தார். அதற்கு கீழே சுதி என்பவர் வயநாடு பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் இருந்தால் என்னிடம் தாருங்கள். என் குழந்தைகளை போல நான் பார்த்துக் கொள்கிறேன்,எனக்கு இரண்டு குழந்தைகள் இன்னும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து நானும் என் மனைவியும் தங்கம் போல் பார்த்துக் கொள்வோம்..’என்று பதிவு செய்தார்

இந்த பதிவுக்கு பதிலளித்த வீணா ஜார்ஜ் வயநாடு பேரிடரில் அனாதையான குழந்தைகளை தத்தெடுக்க பலர் தயாராக உள்ளனர். பலர் சமூக ஊடகங்கள் மூலம் தன்னார்வத் தொண்டு செய்கின்றனர்.

எனது முகநூல் பதிவின் கீழே ஒரு கருத்தைக் கவனித்தேன்.அன்புள்ள சுதி, உங்கள் கருணைக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்கள் வலி முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியது.உங்கள் வார்த்தைகளை பார்த்து என் கண்களில் கண்ணீர் கசிந்தது.உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் அன்பு.

மத்திய சிறார் நீதிச் சட்டம், 2015ன் கீழ் பெற்றோரை இழந்து, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்கிறது. வளர்ப்பு பராமரிப்பு மற்றும் தத்தெடுப்பு அனைத்தும் சட்ட நடைமுறைகள் மூலம் செய்யப்படுகின்றன. CARA (Central Adoption Resource Authority) இல் பதிவு செய்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம். 6 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு வளர்ப்பு பராமரிப்பும் வழங்கப்படுகிறது. அதுவும் குழந்தையின் நலனை மனதில் கொண்டு செய்ய வேண்டும்.CARA வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அரசாங்க பராமரிப்பில் உள்ள எந்தவொரு குழந்தையையும் தத்தெடுக்கும் செயல்முறையிலும் நீங்களும் பங்கேற்க முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை சுதி போன்ற நல்ல உள்ளங்கள் பலர் அணுகுவதால் இதை தெளிவுபடுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • sai abhyankkar introducing in malayalam cinema through balti movie Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?