பிரம்மாண்ட பங்களா.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி.. சோதனையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2024, 12:59 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் பிரபல குற்றவாளியான சீசிங் ராஜாவிற்க்கும் தொடர்ப்பு இருப்பதாக அவரை பிடிக்கும் வகையில் அவரின் கூட்டாளி சஜித் என்பவரை தாம்பரத்தில் போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்தனர்,

கைது செய்யபட்ட சஜித் மீது ஆந்திரா, தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை,கொலை முயற்ச்சி, வாகன திருட்டு ,வழிப்பறி பத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன,

இந்நிலையில் இன்று சஜித்தின் வீட்டில் சோதனை செய்த போது மூன்று கிலோ கஞ்சா,ஆறு பட்டாகத்திகள் ,இரண்டு செல்போன்கள் ,சங்கர்நகர் மற்றும் பீர்க்கன்காரனை பகுதிகளில் திருப்டபட்ட இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,

சஜிதிடம் சீசிங் ராஜா குறித்து பல்வேறு தனிப்படை போலீசாரும் விசாரித்துள்ளனர், ஆனால் தான் மூன்று ஆண்டுகளாக விலகி இருப்பதாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்

மேலும் விசாரனையில் சில வருடங்களாக மொத்த கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து படப்பையில் பிரமாண்டமாக வீடுகட்டி வாழ்ந்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தான்,

இதனையடுத்து சஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?