பாலியல் புகாரில் கொளத்தூர் மணி? நிர்வாணப் படங்களை காட்டி பணம் பறிக்க முயற்சி? புகாரளித்த பெண் மீது அவமதிப்பு : அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan6 பிப்ரவரி 2022, 2:33 மணி
திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண்ணை தடுத்து நிறுத்தி ஆபாசமான வார்த்தையில் திட்டிய திவிகவினரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நிர்வாணப்படங்களை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதாரங்களை சேகரித்த பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள திராவிட விடுதலை கழக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை வழிமறித்த திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்களும், கொளத்தூர் மணி ஆதரவாளர்களும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடினர். மேலும் அந்த பெண் மனநோயாளி என குற்றம்சாட்டினர்.
இது குறித்து பெண் வெளியிட்ட வீடியோவில், மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் போனில் அழைத்து தங்கள் மீது புகார் வந்துள்ளதாகவும், திவிக வை சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்ததாகவும், உடனே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல் ஆய்வாளர் பேசியதாக கூறினார்.
கொளத்தூர் மணியின் ஆதரவாளர் தன்னை மிரட்டுவதாகவும், பயத்தில் என் மீது அவதூறுகளை பரப்பி என் மீது களங்கப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை கொளத்தூர் மணி செல்போனில் பார்த்ததற்கான ஆதாரத்தை வெளியிட போவதாக கூறிய அந்த பெண், நிர்வாணப்படங்களை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இது குறித்த முழு வீடியோ கீழே…,
0
0