மதவெறி காரணமாக குக்கி சமூக பெண்களை நிர்வாணப்படுத்தி சீரழித்தனர் : ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 ஜூலை 2023, 1:20 மணி
RS Bharati - Updatenews360
Quick Share

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி விவிடி சிக்னல் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மணிப்பூர் கலவரம் நடந்திருப்பது மத வெறியால் மட்டுமே, தாககப்பட்டவர்கள் கிருஸ்துவர்கள் என்பதால், 60 சட்டமன்றம் உறுப்பினர்களில் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்து மதம் சார்ந்த மக்கள் என்ற அடிப்படையில், மனித குலத்திற்கு அப்பாற்பட்டு நடந்த கலவரம் ஆகும். குஜராத்தில் முஸ்லிம் என்ற காரணத்தால் பதைக்க, பதைக்க முஸ்லீம் கர்ப்பிணி பெண் கற்பழிக்கப்பட்டார்.

கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தினால் குக்கி சமுதாய மக்கள் நிர்வாணப்படுத்தப்பட்டனர். இதனை தட்டி கேட்ட தம்பி, தந்தை கொலை செய்யப்பட்டார். சகோதரியும் சேர்ந்து கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுக்க நம் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், 2024ல் பாஜக ஒழிய வேண்டும் என்றார். பின்னர், பாஜாகவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 307

    0

    0