நகைக்கடன் தள்ளுபடி எங்கே..? உதயநிதியிடம் வாக்குறுதி பற்றி அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் பெண்கள்… பிரச்சாரத்தில் திமுகவுக்கு எழுந்த புது நெருக்கடி…!!

Author: Babu Lakshmanan
10 February 2022, 1:26 pm
Quick Share

தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தடுத்து பெண்கள் கேள்விகளால் துளைத்தெடுத்ததால் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கல்லுகுளம் பகுதியில் மாநகராட்சியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது தங்கமாள் என்ற பெண் தனக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என புகார் எழுப்ப, உதயநிதி ஸ்டாலினினை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்க முடியாத உதயநிதி, மனுவாக எழுதிக் கொடுக்கும்படி சமாளித்ததோடு, சட்டமன்ற உறுப்பினரை தேடினார். ஆனால் அவர் பதிலேதும் கூற முன் வராத நிலையில், மற்றொரு பெண்ணான கவிதா, நிதி உதவி வழங்கும்படி கோரிக்கை வைத்து கேள்வி எழுப்பினார். அடுத்தடுத்து பெண்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பியதால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடர முடியாமல் அடுத்த பகுதி பிரச்சாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து, கேள்வி கேட்ட பெண்களை திமுகவினர் சூழ்ந்ததால் பிரச்சாரம் நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், மூன்று குழந்தைகளுடன் சிரமப்படும் தாய்க்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றுதான் கேட்டதாகவும், வேறு ஒன்றும் கேட்கவில்லை என கூறி அப்பெண்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது நகைக்கடன் தள்ளுபடி குறித்து உதயநிதி கேள்வி எழுப்பிய நிலையில், இன்று தஞ்சையிலும் இதே சம்பவம் நடந்திருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 576

0

0