தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் : தேவர் ஜெயந்தி விழாவில் அண்ணாமலை கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 1:12 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும்.

தேவரின் சித்தாந்தம், கொள்கையை பாஜகவினால் மட்டுமே செயல்படுத்த முடியும் எனவும், தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என கூறினார்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?