திமுகவை என்ன பண்ண போறேனு பாருங்க.. ஆர்எஸ் பாரதியை சிறையில் தள்ளாமல் விடமாட்டேன் : அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 2:29 pm

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதன்படி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு இன்று நேரில் சென்ற அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூன் மாதம் 23-ந்தேதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்தது தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அண்ணாமலை கூட்டு சதி செய்து எங்கோ ஒரு இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து கொடுத்ததாலேயே மக்கள் இறந்துள்ளனர் என்று சொல்லி இருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்து எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை. என் மீது எத்தனையோ பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் கூறப்பட்டுள்ளன.

இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளோம். இந்த பணத்தை அவரிடமிருந்து பெற்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக அங்கேயே ஒரு முகாம் அமைக்க உள்ளோம்.

அதுவே எங்கள் நோக்கம்.எனவே இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம். ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கை கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்வோம். இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.வை யாரும் எதிர்காமலேயே இருந்தனர். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறோம் என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!