தமிழக அரசின் வரி உயர்வுக்கு கண்டனம்… தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று ஸ்டிரைக்… வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
9 November 2023, 12:54 pm

கனரக லாரிகளுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டண அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தற்போது 2. 50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன. லாரி தொழிலில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன.

இதனிடையே, லாரிகளுக்கு பசுமை வரியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது. அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பசுமை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, உக்கடம் லாரி பேட்டையில் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதேபோல, தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?