ரூ.3,500 கோடியில் லூலூ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்… தமிழர்களை ஒடுக்கும் முயற்சி : சீமான் கடும் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
30 March 2022, 1:35 pm
Quick Share

திருச்சி : நீட் தேர்வு ரத்து தொடர்பாக தென் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்ட பேரவையிலும் தீர்மானத்தை கொண்டு வந்து அனைத்து மாநில முதல்வரையும் அழைத்து தமிழக முதல்வர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரிப்பாளர்.

2015 ஆம் ஆண்டு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் எண்2ல் ஆஜராகினார். குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி திரிவேணி மீண்டும் அவரை ஏப்ரல் 21ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது :- 2015ல் இன எழுச்சி மாநாடு நடத்திய போது அதில் கலந்து கொண்ட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சொல்லப்போனால் மேடையில் ஏறிய அனைத்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் 5,000 கோடி வரை இவர்கள் செலவு செய்கிறார்கள். 6500 கோடி முதலீடு கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். இது பெரியவர்கள் விளையாட்டு. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், எனக் கூறினார்.

லுலு மார்கெட் தொடர்பாக பதிலளித்த போது :- இது முதலீடே அன்னிய முதலீடு கப்பலில் வந்து அவர்களை விரட்டிவிட்டு வானூர்தியில் வருபவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறார்கள். லுலு மார்கெட் முழுவதும் வட இந்தியவர்கள் தான் வேலை செய்ய போகிறார்கள். அரசியலையும் இங்கு உள்ள நிலைபாடுகளை வட இந்தியர்களே தீர்மானிப்பார்கள். இது முற்றிலும் பேராபத்தை நோக்கி செல்லும்.

நீட் விலக்கு தொடர்பாக ஜனாதிபதியை முதல்வர் சந்திக்க வேண்டும். உங்களில் ஒருவன் என்கிற புத்தகத்தை முதல்வர் எழுதி தென் மாநிலங்களில் உள்ள பல மாநில முதல்வர்களை அழைத்து வெளியிட்டார். அதேபோல எல்லோரையும் அழைத்து எல்லாம் மாநில சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி நீட்டுக்கு எதிரான மாநாடு ஒன்றை முதல்வர் நடத்தலாம், எனக் கூறினார்.

பள்ளி மாணவர்கள் பல இடங்களில் முறை இன்றி நடந்து கொள்வது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- 90 விழுக்காடு குற்றங்கள் நிறைந்த போதையில் தான் நடக்கிறது. ஆனால் அதில் தான் அரசாங்கமே நடைபெறுகிறது என்று கூறுகிறீர்கள்.

ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட எல்லா அரசு அதிகாரிகளும் துபாய் சென்று உள்ளார்கள் ?, அரசு அதிகாரிகள் செலவை ஏன் திமுக ஏற்க வேண்டும் ? என்கிற கேள்வி எழுகிறது. இலங்கையில் நடைபெற்று வரும் பொருளாதார சரிவு. அடுத்த இரண்டு ஆண்டில் இதே நிலைமை நம் நாட்டிற்கும் வரும், இரண்டு ஆப்பிள் 450 ரூபாய் என்றால் அதே நிலை இங்கும் வரும். ஏனென்றால் நாம் ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கை அப்படி உள்ளது, என தெரிவித்தார்.

Views: - 743

0

0