ஓடும் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் சில்மிஷம்…ஊக்கால் கையை பதம் பார்த்த வீரப்பெண்: வீடியோ ஆதாரத்தோடு போலீசில் ஒப்படைப்பு..!!

Author: Rajesh
3 April 2022, 3:34 pm
Quick Share

சென்னை: மதுரவாயலில் ஓடும் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயது பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூருக்கு அரசு பேருந்தில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் கையை நீட்டி அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண் தன்னிடம் இருந்த சேப்டி பின்னை கொண்டு கையை குத்தியுள்ளார். ஆனால் அந்த ஆசாமி கையை எடுக்காமல் வைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண் பேருந்தை நிறுத்த சொல்லி வானகரம் அருகே அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த நபர் பெயர் ராகவன்(40) என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் பதிவு செய்த வீடியோவோடு போலீசாரிடம் புகார் அளித்து, அநத் காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார். மேலும் அந்த வீடியோவில் புகார் அளித்த சிலமணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.

அதேசமயத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் நடத்துநர் இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் உடனடியாக அரசு விரைவுப் பேருந்துகளில் நடத்துநனர்களை நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 389

0

0