மேகதாது அணை விவகாரம்… கர்நாடகாவின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது.. கட்டாயம் முறியடிப்போம் : அமைச்சர் துரைமுருகன் உறுதி

Author: Babu Lakshmanan
5 March 2022, 4:10 pm

சென்னை : மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடகா ரூ.1,000 கோடி ஒதுக்கியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌‌ அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன்‌ 2022.23 பட்ஜெட்டில்‌ ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும்‌ பத்திரிக்கைகளிலும்‌ செய்திகள்‌ வந்துள்ளன. மேகதாது அணை கட்டும்‌ பிரச்சணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும்‌, கூட்டாட்சி
தத்துவத்திற்க்கும்‌ முரணானது.

05.02.2007 அன்று நடுவர்‌ மன்றம்‌ அளித்த இறுதி தீர்ப்பையும்‌ 16.02.2015 அன்று உச்ச நீதிமன்றம்‌ அளித்த தீர்ப்புகளையும்‌ மதிக்காமல்‌ தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின்‌ குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின்‌ இசைவை பெறாமலும்‌ எந்தவித ஒப்புதலும்‌ பெறாமலும்‌ மேகதாதுவில்‌ ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும்‌ நியாயமாகாது.

இந்த அறிவிப்பு வரும்‌ கர்நாடக அரசின்‌ சட்டமன்ற தேர்தலை கருத்தில்‌ கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி ஒருப்பிணும்‌, தமிழக அரசு, தமிழக விவசாயிகளின்‌ நலன்‌ கருதி கர்நாடக அரசின்‌ மேகதாதுவில்‌ அணைகட்டும்‌ முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுக்கும்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!