தமிழகத்தை அடுத்து ஆளப்போவது உதயநிதி ஸ்டாலின்தான்… அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன் டாக்..!!

Author: Babu Lakshmanan
23 June 2022, 6:07 pm
Quick Share

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, பெண் விடுதலை இவை எல்லாம் ஒருங்கிணைத்தது தான் திராவிட மாடல். இந்த ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினால், மக்கள் ஓட்டுபோட்டு சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தது மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக மட்டும்தான் என்று அவரே கூறுவார். ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களே முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

udhayanidhi stalin - updatenews360

தமிழகத்தில் உள்ள இளைய சமுதாயத்தை பட்டை தீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் பாசறை பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார். வருங்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்ய போகிறவர் உதயநிதி ஸ்டாலின் தான். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கப் போவது முதலமைச்சர் ஸ்டாலின் தான், எனக் கூறினார்.

Views: - 332

0

0