என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. அமைச்சர் பொன்முடி வீட்டில் ED சோதனைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 1:26 pm

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இந்த சோதனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சோதனை நடவடிக்கை குறித்து பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை கண்டு பாஜக எரிச்சலடைந்துள்ளது என தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த சோதனை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் தனது இந்த சோதனை பற்றி தெரியாது என கூறியவர், பின்னர் என்னதான் நடக்கும் நடக்கட்டும், இருட்டினில் நீதி மறையட்டுமே என பாடல் மூலம் பதில் கூறிவிட்டு சென்றுவிட்டார் அமைச்சர் துரைமுருகன்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!