அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ஐடி ரெய்டு… சிரித்தபடி அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்..!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 12:47 pm

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், எனக்கு சொன்னார்கள் கேட்டுக் கொண்டேன். அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எது மாதிரியோ பண்றது பண்ணி கொண்டு போகட்டும், என அவர் பாணியில் சிரித்தபடியே பதில் அளித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், அதையெல்லாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம். திமுகவை பொறுத்தவரையில் இது முதல் முறையல்ல, பலமுறை நடைபெற்று உள்ளது. பலமுறை நாங்களும் இதை சந்தித்துள்ளோம், எனக் கூறினார்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 918

    0

    0