அமைச்சர் எவ வேலுவை இறுக்கும் ஐடி ரெய்டு… பல்வேறு இடங்களில் 5வது நாளாக நீடிக்கும் சோதனை ; காசா கிராண்டில் சிக்கிய ரூ.600 கோடி..?

Author: Babu Lakshmanan
7 November 2023, 8:39 am

தமிழகம் முழுவதும் அமைச்சர் எவ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் , தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது. அமைச்சரின் மகனுடைய வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை 5வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆனால், இதுவரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதனிடையே, காசா கிராண்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.600 கோடி கணக்கில் வராதது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவன இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?