‘எங்களை கூப்பிடாமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம்..’ தம்பியுடன் வந்து அமைச்சர் கீதா ஜீவன் வாக்குவாதம்… அதிர்ந்து போன கல்வி அதிகாரி…!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 6:09 pm
Quick Share

தூத்துக்குடி : அரசு நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளியான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியுடன் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது சகோதரரும், மேயருமான ஜெகன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் திடீரென என்ட்ரியான அமைச்சர் கீதாஜூவன் மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரரான மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் எங்களை ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு திடீரென விசிட் அடித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜூவன் மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரரான தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தங்களை இந்த நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை…? எப்படி நீங்கள் எங்களை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்தலாம்..? தூத்துக்குடியில் எங்களை கேட்காமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், அமைச்சரின் சகோதரரான மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கடுமையாக நடந்து கொண்டு பேசியதை கண்டு அதிர்ந்துபோய் பேசாமல் அதிகாரிகள் நின்றுகொண்டு இருந்தனர். இதனால், இந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக சர்வே சொல்லுகிறது, என்றார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் சேர்க்கை படிவங்களை பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார்.

Views: - 613

0

0